அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்கள்
ஆமென் வேதாகம கல்லூரிக்கு வரவேற்கிறோம்!
ஐரோப்பிய நாடுகளுக்கான ஆசிய ஊழியம்
ஆமென் வேதாகம கல்லூரி
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
ஆவியானவரை அனுபவிப்போம், ஆவியானவரோடு வாழ்வோம்
ஆல்பா ஒமேகா சர்வதேசக் கல்லூரி
எங்கள் ஆலோசனைக் குழுவின் வார்த்தைகள்
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சபைத் தலைவர்களும் வேதாகம ஆசிரியர்களும் ஆமென் வேதாகமக் கல்லூரியின் ஊழியத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
முதல்வரின் செய்தி
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
ஆமென் வேதாகம கல்லூரிக்கு வரவேற்கிறோம்!
தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் அர்ப்பணிப்புள்ள இந்த சமுகத்தில் நீங்கள் சேர்ந்துள்ளீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஐரோப்பாவில் உள்ள தமிழ் பேசும் மக்கள் மீது நாம் ஒன்றாக சேர்ந்து நல்ல தாக்கத்தை கொண்டுவரும் வகையில் தேவனையும் அவருடைய சித்தத்தையும் அறிய வேதாகமத்தைப் படிக்கும் ஒரு கற்றல் சமுகத்தை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் இங்கே எடுக்கிறோம். அவ்வாறு செய்வதன் முலம் எங்கள் கல்லூரியில் பலர் தங்கள் வாழ்க்கைக்கான தேவனின் விருப்பத்தையும் நோக்கத்தையும் கண்டுபிடித்து கிறிஸ்துவைப் போல வளர்ந்து அவர்கள் தேவனுக்கும், மனிதர்களுக்கும் சிறந்தவர்களாக மாறுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.தேவனுடைய வார்த்தையிைன் மாணவர்களாக நீங்கள் தினசரி அடிப்படையில் வேதாகமத்தில் ஈடுபடுவீர்களானால் உங்கள் கற்றல் ஒருவரோடொருவர் கூட்டுறவைக் கட்டியெழுப்பவும் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும், ஜெபிக்கவும் ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாக இருக்கும். வகுப்பறைகள், சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் பிற குழு செயல்பாடுகளில் உங்கள் அனுபவங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஊழியத்திலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்படி வடிவமைக்க உதவும். இதைத்தான் வேதாகமம் சரியாகச் சொல்கிறது,
சிறந்த பாடத்திட்டம் மற்றும் சிறந்த ஊழிய அனுபவமும் மற்றும் கல்வித் தகுதிகளும் கொண்ட ஆசிரியர்களை வைத்து, வாழ்க்கையை மாற்றும் இறையியல் கல்வியை நாங்கள் வழங்குகிறோம். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், சபையில் உள்ள விசுவாசிகள் மற்றும் அண்டை வீட்டார்களால் உருவாக்கப்பட்ட செல்வாக்கு வட்டங்கள் நம் அனைவருக்கும் உள்ளன. வரவிருக்கும் நாட்களில் இன்னும் வெற்றிகரமாக அவர்களைப் நல்விதத்தில் பாதிக்கும் ஒரு சிறந்த கிறிஸ்தவத் தலைவராக உங்கள் வளர்ச்சியை எளிதாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே தேவனில் ஒன்றாக வளர்வோம் !
கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக!
Let us together serve the Lord faithfully.
தேவனுடைய வார்த்தையின் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்கும் கல்லூரி ,இயேசுவின் மீதான அன்பில் வளர்ந்து, சமூக உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவோம்.
கிறிஸ்துவில் வேரூன்றி, நாளைய உண்மையுள்ள ஊழியத்திற்காகப் பயிற்றுவிக்கப்படுகிறோம்.
சமீபத்திய செய்தி
The accusing spirit and the healing spirit குற்றம்சாட்டும் ஆவியும் குணப்படுத்தும் ஆவியானவரும்




